தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கொள்கலன் இயக்குநர்கள் அடையாள வேலைநிறுத்தம்

கொள்கலன் இயக்குநர்கள் அடையாள வேலைநிறுத்தம்

Written By paadumeen on Thursday, February 16, 2012 | 1:45 PM

கொள்கலன் வாகன போக்குவரத்து இயக்குநர்கள் தமக்கு உறுதியளிக்கப் பட்ட கொடுப்பனவுகளை வழங்குமா று வலியுறுத்தி இன்று அடையாள  வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்ட னர்.

இறக்குமதியாகும் துறைமுகத்திலிரு ந்து பல்வேறு இடங்களுக்கு பொருட் களை கொண்டுசெல்வதற்கு பல்வேறு கட்டண வீதங்களுக்கு இணக்கம் முன்னர் காணப்பட்டதாகவும் ஆனால் துறைமுகத்திலிருந்து பொருட்களை அகற்றும் நிறுவனங்கள் இக்கட்டணத் தை வழங்க முன்வரவில்லை எனவும் கொள்கலன் போக்குவரத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுனில் ஆனந்த கூறினார்.

அண்மைய எரிபொருள் விலை அதிகரிப்பால் கொள்கலன் இயக்குநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கொள்கலன் சாரதிகள் வலியுறுத்தியுள்ளனர். கொள்கலன் போக்குவரத்துக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 15 சதவீதம் சாரதிகளுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இதை 17 சதவீதமாக அதிகரிக்கு மாறு அச்சாரதிகள் கோருகின்றனர். கொள்கலன் உதவியாளர்களுக்கு 10 சதவீதம் சம்பளம் வழங்கப்படுகிறது.

அகில இலங்கை கொள்கலன் சாரதிகள் சங்கம் இக்கோரிக்கைக்கு ஆதரவளிப் பதாக சங்கத்தின் செயலாளர் ஆர்.ஐ.ஆப்தீன் தெரிவித்தார். நாம் கடினமான பணியை செய்கிறோம். சிலவேளை கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப் படுவதற்காக 10-22 மணித்தியாலங்களும் நாம் காத்திருக்க நேரிடும் என அவர் கூறினார்.

(கெலும் பண்டார)

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment