தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » தீபிகா படுகோன் மீது இந்தி படத்தயாரிப்பாளர் புகார்

தீபிகா படுகோன் மீது இந்தி படத்தயாரிப்பாளர் புகார்

Written By paadumeen on Monday, February 13, 2012 | 12:43 PM

இந்தி படத்தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி தயாரிக்கும் ‘ரேஸ்-2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒரு வாரகாலம் நடித்தும் கொடுத்துவிட்டு பிறகு அப்படத்தில் இருந்து விலகுவதாகத் தெரித்துள்ளார் இந்தி நடிகை தீபிகா படுகோன் இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தரணி இந்தி சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் ரஜினியுடன் ‘ராணா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷீட் ஒதுக்கினார் தீபிகா படுகோன். ஆனால் அந்தப் படம் ஒருநாள் படப்பிடிப்போடு நிறுத்திவைக்கப்படுள்ளது. தற்பொழுது ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்படுள்ளார். இந்நிலையில் ‘ரேஸ்-2’ படத்தில் இருந்து விலகக் காரணம் ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்கவே என்று இந்தித் திரை யுலகில் பேச்சு அடிப்படுக்கிறது.

இதன் காரணமாக இந்தி படத் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி மும்பையில் உள்ள சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா படுகோன் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் “நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறுகிறார்.

வேறு பட வாய்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்து இருக் கிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடி யாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தீபிகா படுகோனேக்கு தகவல் தெரிவித்து விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது.

இந்திப்பட உலகில் சினிமா சம்பந்தப்பட்ட புகார்களை முதலில் சினிமா கலை ஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரிக்கும் அது தனது அறிக்கை யை மேற்கு பிராந்திய (மும்பை) சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கும். புகார் கூறப்பட்டவர்கள் விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதில் சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அவருக்கு ரெட் கார்டு போட்டுவிடுவார்கள்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment