நெடுந்தீவு ஈழ மக்கள் ஜனநாயகக் கட் சிக் காரியாலய வளாகத்தில் இடம்பெ ற்ற மக்கள் சபையினரால் முனனெடுக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா விடுதி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இப் பிரதேச இளைஞர் யுவதி களுக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் குறிப் பிட்டார். இதேவேளை தீவுப் பகுதியைச் சார்ந்த வேலையற்ற பட்ட தாரிகளுக்கு கூடிய விரைவில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும்.
அத்துடன் நெடுந்தீவில் சேதமுற்றுக் காணப்படும் பிரதான போக்குவரத்து வீதிகள் கூடிய விரைவில் செப்பனிடப்படுமெனவும் இப்பகுதி மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஈ.பி.டி.பி.யின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன் அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் எதிர்கால அரசியல் பயணம் மக்க ளின் நலன் மேம்பாட்டினை முன்னி றுத்தியதாக அமையும் எனக் குறிப் பிட்டார்.
இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரும் ஈ.பி.டி.பி.யின் நெடுந்தீவு பிரதேச இணைப்பாளருமான றெக்ஷி யன் (ரஜீவ்) ஈ.பி.டி.பி.யின் புங்குடுதீவு இணைப்பாளர் நவம் நெடுந்தீவு பிர தேச சபை உறுப்பினர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மக்கள் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண் டனர்.
0 comments:
Post a Comment