தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது

Written By paadumeen on Sunday, February 19, 2012 | 12:54 PM

Sunday, February 19, 2012

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப் பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதி யான தங்க த்தை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகா ப்பு பிரிவினர் கைப்பற் றியுள்ளனர். இந்த சம் பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவி த்துள்ளது.

சுமார் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமாக தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. இந்தத் தங்கம் இந்தியப் பிரஜை ஒருவரினால் சிங்கப் பூரிலிருந்து கொண்டுவரப்பட்டு விமா னத்தில் வே றொரு நபருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசார ணைகளில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் சுங்க திணைக்கள அதிகாரி கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More | comments

சிலாபத்தில் இரு லொறிகள் மோதி விபத்து - ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Written By paadumeen on Saturday, February 18, 2012 | 7:47 PM

Saturday, February 18, 2012

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக் கட்டு பிரதேசத்தில் ஒரே திசையில் பயணித்த இரு லொறிகள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாய மடைந் துள்ளனர்.  இவ்விபத்து இன்று அதிகாலை 4 மணி யளவில் இடம்பெற்றதாக சிலாபம் பொலிஸார் தெரிவித் தனர். புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு லொறிகளே இவ்வாறு மோதி விபத்துக் குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒரு லொறி யின் சாரதி பலியானதோடு காயமடைந்த இருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இவ்விபத்து குறித்து சிலாபம் பொலி ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Read More | comments

சம்பூர் பிரதேசத்தை சுவீகரிக்க எடுக்கப்படும் மறைமுக சதி அம்பலம்!

சம்பூர் பிரதேசமானது கடற்கரைச் சேனை, உட்பட கிட்டத்தட்ட 3ஆயிரத்து 400 ஹெக் டயர் பரப்பைக் கொண்டது இதில் 500 ஏக் கர் அனல் மின்நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. மிகுதி நிலப்பிரப்பி லும் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் இந்திய மற் றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கும் தொழிற் சாலைகள் அமைப்பதற்கு அனுமதியளிக் கும் முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக முதலீட்டுச் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூதூர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் முதலீட்டுச் சபையால் கொழும்புக்கு அழைக்கப் பட்டுச் சம்பூர் பிரதேசம் தொடர்பாகவும் அதன் வரைபடம் தொடர்பாகவும் ஆராயப்பட் டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனம் ஒன்று தொழில் பேட்டை அமைப்பதற்காக 4மில்லியன் அமரிக்க டொலரை முதற்கட்டமாக செலவிடவுள்ளதாகவும் தெரிகிறது. சம்பூர் அனல் மின் நிலையம் தவிர்ந்த ஏனைய பகுதியில் மக்களைக் குடியமர்த்தத் தயார் என அரசாங்கத்தால் அறிவித்த பின்னரும்கூட இடம்பெயர்ந்த மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படுவதற்கான தொடர் நடவடிக்கைகள் அரசால் மேற் கொள்ளப்படுவது குறித்து இப்பிரதேச மக்கள் மிகுந்த வேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலீடு என்ற போர்வையில் சம்பூர் அனல் மின் நிலையம் தவிர்ந்த எனைய பகுதிகளையும் சுவிகரிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டு திருகோணமலை நகரசபை உறுப்பினரான சி.நந்தகுமார் கடிதமொன்றை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆனால் இதுவரை கூட்டமைப்பு தலைவரிடமிருந்து எவ்வகையான பதிலும் வழங்கப்படவில்லை யென நகரசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறிபோகவிருக்கின்ற மீதமிருக்கிற நிலத்தையும் மீட்டுத் தருமாறு இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மக்களின் நலனுக்காக குரல்கொடுப்ப வர்கள் தயவுசெய்து இம்மக்களுடைய பிரச்சனையை கருத்திற் கொண்டு சுமூ கமான முறையில் தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முன்வரவேண்டும். செய்வார்களா?
Read More | comments

அதிகரிக்கும் விலையேற்றம்! அடுத்து பால்மா?

எரிபொருள் விலை ஏற்றத்தினைத் தொடர்ந்து பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தி டம் பால்மா விநி யோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. பால்மாவினை விநியோகிக்கும் நிறுவனங்கள் இறக்குமதி மற்றும் போக்குவரத் துச் செலவுகள் என்பவற்றினை காரணம் காட்டி இப் பால் மாவின் விலை உயர்வினைக் கோரிவுள்ளதாக நுகர்வேர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக பெயர்களைக் கொண்ட பால்மாவை நிறு வனங்களே இணைந்து இவ் விலை அதிகரிப்பினை கோரியுள்ளது. அதிகரிப்பினை வர்த்தகக் துறை அமைச்சரிடம் கோரியுள்ளது. பால்மாக்களின் விலையானது அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள் ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக இலங்கையின் எரிபொருள் விலை ஏற்றத் தினால் மக்களு டைய அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மின்சார கட்டணங்களுடன் கூடிய எரிபொருள் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள், நீர்க்கட்டணங்கள் போன்றன அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் கட்டண உயர்சியினால் நாட்டில் மக்கள் தொடர்ச்சியாக அரசியற் கட்சிகளும் மக்களுன் இணைந்து அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றமை பாரிய பிரச்சனையாக உள்ளது.

அரசியற் கட்சிகள் வரிசையில் ஜனநாயக மக்கள் முன்னனி, ஜக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இடது சாரி முன்னனி போன்ற கட்சிகள் நேற்றைய தினம் கொழும்பு புறக் கோட்டையில் மாபெரும் ஆர்பாட் டத்தினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பியின ரும் பல்வேறு போராட்டங்களையும் துண்டுப் பிரசுர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்ற மையும் குறிப்பிடத்தக்கது.

மக்களும் தொடர்ந்து எரிபொருள் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டங் களில் தொழில் பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சிலாபம் பகுதியில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டமையும் பலர் காயமடைந்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கது. மலையக தோட்டப் பகுதிகளிலும் மக்கள் வேலை பகிஸ்கரிப்பிலும் ஈடுபட் டமை குறிப்பிடத்தக்கது.
Read More | comments

கந்தளாய் - ஹபரணை வீதியில் விபத்து

ஹபரணை - கந்தளாய் பிரதான வீதியின் கிதுல்உதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

மதுகமவில் இருந்து சம்பூர் நோக்கி பயணித் துக் கொண்டிருந்த வேனொன்று டிப்பர் வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள் ளானதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
Read More | comments

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

அரசாங்கத்திற்கு சொந்தமான நெல் களஞ்சிய சாலையில் இருந்து சட்ட விரோதமாக நெல்லை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் எலஹெர பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். நெல் விநியோக சபைக்கு சொந்த மான களஞ்சியசாலையிலுள்ள நெல்லை தனியார் வர்த்தகர் ஒருவருக் கு குறித்த நபர் விநியோகித்துள்ளதாக பொலிஸார் கூறியுள் ளனர். நெல்லை விநியோகிப்பதற்காக பயன்டுத் தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப் பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More | comments

வாகரையில் புதையல் தோண்டியோர் கைது!


வாகரை - மதுரன்கேணிகுளம் மற்றும் ஓவிலியா மடு ஆகிய கிராமங்களுக்கு இடையிலான பிரதே சத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நேற்றுமுன் தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட் டுள்ள சந்தேகநபர்களில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் அடங்கு வதாக தெரிவிக் கப்படுகிறது.இதன்போது பூஜை பொருட்கள், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக் கிள் ஒன் றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Read More | comments

அரசாங்க வைத்தியர்கள் இடமாற்றங்களை நிராகரிக்க முடிவு


அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரு கின்ற வருடாந்த இடமாற் றங்களை நிராகரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவருகிறது. 

அரசாங்க வைத்தியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றிடம் வழங்கப்படுவ துண்டு. இதனால் மருத்துவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த கலந் துரையாடலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென் று இதற்கான தீர்வு காணவுள்ளதாக கல்வியமை ச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். எனினும், இப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், தொழிற்சங்க பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தக்கோரி மீண்டும் ஜனாதிபதி கடிதம் அனுப்பவுள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவிக்கிறது.
Read More | comments

கடுமையான பாதுகாப்பில் சிலாபம் நகர்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது படையினரின் துப்பாக் கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த அன்டனி பெனான் டோவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், சிலாபம் நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமை யாக முன்னெடு க்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவிக் கின்றனர். இந்தப் பாதுகாப் பு நடவடிக் கைகளில் சுமார் ஆயிரத் து 500 பொலி ஸாரை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக் களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். எவ்வித வன்முறைகளும் இன்றி அன்னாரது இறுதி கிரியைகளை நடத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More | comments

ஆப்கன் அரசுக்காக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தக்கூடாது! - ஹமீத் கர்சாய்

ஆப்கன் அரசுக்காக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தக்கூடாது என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் திட்ட வட்டமாக தெரிவித் துள்ளார். தலிபான் களுடன் பேச்சு நடத்துவதற் காக இடத் தை த் தேர்வு செய்வது பேச்சுவார்த் தை யில் ஈடுபடுவது போன்றவற்றை அமெரிக் கா மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறி னார்.

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ள ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரான், ஆப்கன், பாகிஸ்தான் பங் கேற்கும் முத்தரப்பு மாநாட்டுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஏற்பாடு செய்துள்ளார். மாநாட்டுக்கு இடையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கர்சாய் கூறியது: ஆப்கானிஸ் தானுக்காக தலிபான் இயக்கத்தினருடன் அமெரிக்கா பேச்சுவார்த் தை நடத்தக்கூடாது. தலிபான் இயக்கத்தினருடன் பேச்சு நடத்துவதற்கான இடத்தை அரசுதான் தேர்வு செய்யும் என்றார். தலி பான் இயக்கத் தலைவர் களுடன் துபை அல்லது துருக்கியில் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே ஆப்கனில் செயல்படும் தலிபான் அமைப்பினர் கத்தாரில் கடந்த வாரம் அலுவலகம் திறந்துள்ளனர். இந்த அலுவலகமே அமெரிக்காவின் பரிந்துரைப்படி திறக்கப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் பேச்சு நடத்த வசதியாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் வந்திறங்கும் முன்பாக அமெரிக்க செய்தி பத்திரிகைக்கு கர்சாய் அளித்த பேட்டியில் தலிபானுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையில் தமது அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று உடனடியாக தலிபான்கள் மறுத்துவிட்டனர். ஆப்கனில் அதிகாரம் இல் லாத அரசுடன் பேச்சு நடத்தத் தாங்கள் தயாராக இல்லை தலிபான் அமைப் பின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் முன்வந்தது குறித் து கர்சாயிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இத்தகைய ஒத்துழைப்பை தனது அரசு வரவேற்பதாக அவர் கூறி னார். இருப்பினும் இரு தரப்பிலும் நம்பிக்கை யை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்ற பாகிஸ்தானின் முடிவை முன்னர் ஆப்கன் அரசு ஏற்கவில்லை. சோவியத் நாடு துண்டானபோது ஏற்பட்ட நிலைமை மீண்டும் உருவாவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ கூட்டுப் படையினருக்குத் தேவையான எரிபொருள் சப்ளைக்கான தடைகளை அகற்றுமாறு பாகிஸ்தான் அரசை கர்சாய் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பரில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து நேட்டோ படைகளுக்கான எரிபொருள் சப்ளையை பாகிஸ்தான் நிறுத்தியது. இருப் பினும் அழுகும் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ் தான் பாதுகாப்பு அமைச்சர் செüத்ரி அகமத் முக்தார் தெரிவித்தார்.
Read More | comments

டைட்டானிக் கப்பல் மூழ்கிய நூற்றாண்டு நினைவு நாளை அனுசரிக்க கனடா முடிவு

கனடாவின் நோவாஸ்கோட்டியா மாகா ணத்தின் தலைநகர் ஹேலிபாக்சில் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கட லில் மூழ்கியதன் நூறாவது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கட லில் மூழ்கியதன் நினைவுநாள் அன்று மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் ஊர்வல மாகச் செல்கின்றனர். மறுநாள் சர்வ சமயப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.

இந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஹேலி பாக்சில் வந்து சேருமாறு கனடாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெர்சி பாரி ஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த ஊர்வலம் நகரின் டைட்டானிக் தொடர்பான இடங்களைக் கடந்து ஹேலி பாக்ஸ் சிட்டி ஹாலுக்கு முன்பு உள்ள பெரிய மைதானத்தை வந்தடையும்.

நினைவு நாள் பேருரைகள் ஆற்றிய பின்பு பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன்பிறகு நள்ளிரவு 12.20 மணிக்கு கப்பல் விபத்தில் இறந்தவருக்கு மௌ ன அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி காக்கப்படும் அப்போது தேவா ல ய த் தில் மணிகள் ஒலிக்கும்.

ஏப்ரல் 15ம் திகதி அன்று மாலை மூன்று மணியளவில் பேர்வியூ கல்லறைத் தோ ட் ட த் தில் உள்ள புல்வெளியில் இசை நிகழ்ச்சி நடைபெறும். 120 பேருக்கு மேல் புதைக்கப்பட்ட இந்தக் கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்க ளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் வளையம் வைக்கப்படும்.
Read More | comments

சச்சினின் மகன் அர்ஜூன் அதிரடி ?

மும்பையில் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சச்சினின் மகன் அர்ஜூன் எம்ஐஜி கிரிக்கெட் கிளப் அணிக்காக ஆடிவருகிறார்.

நேற்று வெங்க்சர்க்கார் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அர்ஜூன் 34 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அவருடைய அதிரடியால் 125 ரன் இக்கை எளிதாக எட்டி எம்ஐஜி வெற்றி பெற்றது.
Read More | comments

ஸ்ருதி ஹாசனுக்கு ரயன்கோஸ்லிங் மீது காதலாம்!

கனடா நடிகர் மற்றும் பாடகருமான ரயன் கோஸ் லிங்கை காதலிப்பதாக ஸ்ருதி ஹாசன் கூறியுள் ளார். பாலிவுட் படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன், தமிழில் முருகதாசின் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நாயகன் சூர்யா உடன் இணைந்து நடித்தி ருந்தார். விரைவில் வெளியாக உள்ள ஐஸ்வர் யா ரஜினிகாந்தின் '3' படத்தில் நாயகன் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். ஸ்ருதி தனது மனதுக்கு பிடித்த ரகசிய காதலன் யார் என்றும் வாழ்நாள் உறவு பற்றியும் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது கனடா நடிகர் மற்றும் பாடகருமான ரயன் கோஸ் லிங்தான் எனது ரகசிய காதலன் என்று கூறியு ள்ளார். ஆனால் வாழ்நாள் உறவு அதாவது திருமணம் குறித்து எதுவும் சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
Read More | comments

முன்னேற்றம் கண்டுள்ள இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

Written By paadumeen on Friday, February 17, 2012 | 9:01 AM

Friday, February 17, 2012


இலங்கையில் உள்ள அநேகமான பல்கலைக் கழகங்கள் சர்வதேச தரப்படுத்தலில் முன்னேற் றம் கண்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொழும்பு, பேராதனை, ஜயவர்த்தனபுர மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரப்படுத்தலுக்கமைய முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறியுள்ளார். 
இலங்கையின் பல்கலைக்கழகங்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப் படுகின்றது.


பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச தரப்படுத்தலின் பிரகாரம் தெற்காசியாவின் அதி சிறந்த 100 பல்கலைக்கழகங்களுக்குள் இலங்கையின் நான்கு பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Read More | comments

முல்லைத்தீவில் புதிய வாக்களிப்பு நிலையங்கள்


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபை களுக்கான தேர்தலை நடத்துவதற்காக புதிய வாக்களிப்பு நிலையங்களை இனங்காண தேர்த ல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய இந்த வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய பிரதேசங்கள் தொடர் பாக விசேட ஆய்வொன்றும் ஆரம்பிக்கப் பட்டுள் ளது.


வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஆகி யோரின் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்படு வதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதன்போது வாக்களிப்பை நடத்துவதற்கான புதிய வாக்களிப்பு நிலையங்களை தெரிவு செய் வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிதாக நிறுவப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே வாக்களிப்பு நடத்தப்பட்ட அநேகமான வாக்களிப்பு நிலையங்கள் யுத்த சூழலில் அழி வடைந்துள்ளதால் இத்தகைய ஆய்வொன்றை நடத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More | comments

அதிகம் பார்க்கப்பட்டவை

சர்வதேச செய்திகள்

international news